Parkavan Forum

Support : +91 98844 29991

திரு.மு.இராஜா உடையார்

மராட்டிய மாநிலத்தில் தனி ஒரு மனிதனாக நின்று செயற்கரிய செயல்களை ஆற்றி வெற்றிக்கொடி நாட்டிய மும்பை திரு.மு.இராஜா உடையார் என்னும் பார்க்கவனை பற்றிய பதிவு இது……

திரு.இராஜா உடையார் அவர்கள் 23-8-1967 ஆம் ஆண்டு மும்பையில் திரு.ப.முத்துசாமி உடையார்- திருமதி. அமிர்தம் அம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். இவரின் சொந்த ஊர் அதர்நத்தம் கிராமம், திட்டக்குடி வட்டம், கடலூர் மாவட்டம், தமிழ்நாடு.

இவரது மனைவிபெயர் திருமதி ரா.சிவகங்கா. இவருக்கு பரமேஸ்ராஜா உடையார்,B.E. மகேஷ்ராஜா உடையார் B.E. என்ற இருமகன்களும் பவானி D.Ed. என்ற ஒரு மகளும் உள்ளனர். இவரது மகள் பவானியின் கணவர் பெயர்தே. மனிஷ் உடையார். இவருக்கு பரமேஸ் ராஜாஉடையார், மகேஷ்ராஜா உடையார் என்ற இரு மகன்களும் பவானி என்ற ஒரு மகளும் உள்ளனர். பரமேஸ் உடையார்  Golden Harbours (Al Muffadal Group)யில் Technical Sales Engineer ஆகபணி புரிந்து வருகிறார் மற்றும் CPP(Certified Purchasing Professional). மகேஷ்ராஜா உடையார் Electronics and Telecommunication Engineer ஆவார்.   திருமதி.பவானி மும்பையில் உயர்நிலைபள்ளி ஆசிரியையாக பணியாற்றிவருகிறார். இவரது மகள் பவானியின் கணவர் பெயர் தே. மணீஸ்உடையார் B.E(Mech). அவர் மும்பை Anisha Engineering Companyயில்  QA.QC Engineer ஆக பணிபுரிகிறார். திரு.ராஜா உடையார் அவர்களுக்கு இருசகோதரர்களும் இருசகோதரிகளும் உள்ளனர். திரு.மு. சாமிதுரை உடையார் அவர்கள் இவரது மூத்த சகோதரர் ஆவார். திரு.மு. அரசளகுமார் உடையார் இவரது இளைய சகோதரர் ஆவார். இருவரும் அமீரகத்தில் பணிபுரிந்து வருகின்றனர். திருமதி. லட்சுமிக/பெஆ.ராஜேந்திரன் மற்றும் திருமதி.விஜயாக/பெ.ரா.சரவணன் இருவரும்  இவரது சகோதரிகள் ஆவர்.

இவர் M.A., Political science படித்துள்ளார். மேலும் மும்பையில் Import&Exports தொழில் செய்துவருகின்றார்.

திருராஜா உடையார் அவர்களின் பொறுப்புகள்:

*மராட்டிய மாநில அரசின் சிறப்பு நிர்வாகஅதிகாரி, மகாராஷ்டிரா.

* பாரதிய ஜனதாகட்சி, தமிழ் பிரிவின் தலைவர், மும்பை.

*ஜெய்ஹிந்த் பவுண்டேஷன் (பதிவு)-நிறுவனர்/தலைவர்.

* மண்டல ரயில்வே பயணிகள் ஆலோசனைக்குழுஉறுப்பினர், மத்திய ரயில்வே.

* விஜிலன்ஸ் கமிட்டி ரேஷன் உறுப்பினர், மகாராஷ்டிரா.

* மாநிலதலைவர்: மராட்டிய மாநில பார்க்கவகுல முன்னேற்ற சங்கம்.

* தொலைத்தொடர்பு துறை ஆலோசனைக்குழுவின் முன்னாள் உறுப்பினர், மத்தியஅரசு.

திரு. மும்பைராஜாஉடையார்அவர்களின்சாதனைகள்:

        1.இவரதுதனிப்பட்டதீவிரயமுயற்சியால்மும்பையிலிருந்துவிருத்தாசலம்வழியாகசெல்லும் 1) லோக்மான்யாதிலக்டெர்மினல்ஸ்மும்பை-மதுரைஎக்ஸ்பிரஸ்,            மும்பை-நாகர்கோவில்எக்ஸ்பிரஸ்ரயில்கள்விருத்தாச்சலம்ரயில்நிலையத்தில் 3 நிமிடங்கள்நின்றுசெல்கின்றன.

  1. சென்னை -திருச்சிதேசியநெடுஞ்சாலைஎண் 45 இல்உள்ளஅதர்நத்தம்பேருந்துநிலையத்திலிருந்துஅதர்நத்தம்கிராமம்வரையில்உள்ளசாலையில் 17 தெருவிளக்குகள்உலகவங்கியின்நிதியிலிருந்துஇவரதுதனிப்பட்டமுயற்சியால்போடப்பட்டுள்ளது.
  2. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை எண் 45 வழியாக செல்லும் அனைத்து அரசு விரைவு பேருந்துகளும் ஆவட்டி கூட்டு ரோட்டில் பேருந்து நின்று பயணிகளை ஏற்றி நின்று பயணிகளை எறக்கி செல்லுகின்றன, இவரது தீவிர முயற்சியின் கோரிக்கையை ஏற்று இவரது பெயரில் அரசாணை வெளியிட்டு இப்பொழுது ஆவடிகூட்டுரோட்டில் சுற்றியுள்ள சுமார் 15க்கு மேற்பட்ட கிராமமக்கள் பயனடைகின்றனர்.
  3. இவரது விடாமுயற்சியால் தேசிய நெடுஞ்சாலைஎண் 45 இல் உள்ள கடலூர்மாவட்டம், ஆவட்டிகூட்டு ரோட்டில் மேம்பாலம் அமைக்க சுமார் 13 கோடிரூபாய் முன்னாள் மத்தியஇணைஅமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் அவர்களை நேரில் சந்தித்து பெற்றுக்கொடுத்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது
  4. இவரது தீவிர முயற்சியால் 25.01.2005 அன்று மும்பையில் பையாசாகேப் அம்பேத்கர்நகர்- நியூநிம்மோனியாபாக் இடையே 07 தெருவிளக்குகள் போடப்பட்டு மேற்படி திறப்புவிழாவில் பாராளுமன்றஉறுப்பினர்திரு. கிருத்சோமையா , பாஜகவின் அகில இந்திய கமர்சியல் பிரிவு தலைவர் திருஆனந்த்பண்டித் அவர்கள் ஒளிவிளக்கு ஏற்றி செல்லும் ஓம்சக்தி பக்தகோடிகளுக்கு மும்பை-விழுப்புரம்வரை சிறப்புரயில் விடப்பட்டுள்ளது.

மேலும் இவர் காதுகேளாதவர்களுக்கும் பார்வை வேண்டி வருபவர்களுக்கும் இலவசமாக தரமான மருத்துவமனையில் சேர்த்து பார்வை வேண்டி கண் ஆப்ரேஷன் செய்ய உதவி செய்கின்றார். மற்றும் காதுகேளாதவர்களுக்கு காதுகேட்கும்இயந்திரம் நல்ல தரமானது வெளி மார்க்கெட்டில் அதன் விலை 15000/- ரூபாய் ஆனால் ஏழைகளுக்கு வெறும் 500/- கொடுக்கிறார்.

ஆனால் மும்பையில் அரசியல் சம்பந்தப்பட்ட பிரச்சனையானாலும்    சரி…., மருத்துவமனை, ரேசன்கார்டு, போலிஸ்ஸ்டேஷன் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் சிக்கிக்கொண்ட அப்பாவி தமிழ்மக்களோ அல்லது வடநாட்டு மக்கள் யார் வந்து ராஜா உடையாரிடம் உதவிகேட்டாலும் அவர் உடனேசிரித்தமுகத்துடன்செய்துகொடுப்பார்.. சமூக சேவகர் மும்பை ராஜா உடையார் அவர்களை வாழ்த்துவதில் பெருமைகொள்வோம்…

Spread the love