Parkavan Forum

Support : +91 98844 29991

திரு.ஜெயப்பிரகாஷ்

ஜெயபிரகாஷ் என்னும் பார்க்கவனை பற்றிய பதிவு….

திரு.ஜெயப்பிரகாஷ் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தாலுக்கா மூங்கில் துறைப்பட்டு என்னும் கிராமத்தில் 18/08/1977 ஆம் ஆண்டு தனபால் உடையார் அஞ்சலாட்சி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப்பிறந்தார்.

திரு.ஜெயப்பிரகாஷ் அவர்களுக்கு ஒரு இளையசகோதரனான திரு.ரமேஷ்தனபால் அவர்கள் B.E (EEE) படித்து OMAN நாட்டில்பணிபுரிகின்றார்.

இவர் 1996 ஆம் ஆண்டு பெரியகுளம் தங்கமுத்து பாலிடெக்னிக்கல்லூரியில் படித்தார். குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக கோவை தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து பின்பு கல்வி பயில வேண்டும் என்ற ஈடுபாட்டால் கடன் பெற்று இன்ஜினியரிங் திருவண்ணாமலை அருனை பொறியியல் கல்லூரியில் படித்துமுடித்தார். திரு.ஜெயப்பிரகாஷ் அவர்கள்தான் அவர் குடும்பத்தின் முதல்பட்டதாரி ஆவார். அவரைப்பார்த்து அவரது இளைய சகோதரசகோதரிகளும் உத்வேகம் கொண்டு மேற்படிப்புபடித்தனர்.

B.E படித்து முடித்தவுடன் குடும்ப சூழ்நிலை காரணமாக குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்து தனது இளையதம்பியை இன்ஜினியரிங் படிக்க உறுதுணையாக இருந்தார்.2000 ஆம் ஆண்டு ABB கம்பெனியில் COMMISSIONING ENGINEER பணிபுரிந்தார். பின்னர் 2009ஆம் ஆண்டு AREVA -QATAR   DESIGN ENGINEER  ஆக தற்போது GENERAL ELECTRIC (GE) கம்பெனியில் PROJECT ENGINEERING MANAGER ஆக பணிபுரிகிறார்.

குடும்ப சுமைகள் குறைந்த பிறகு திருமணத்திற்கு சம்மதித்தார். திரு.இளங்கோ M.A,M.Ed. மற்றும்திருமதிஉஷா M.A, M.Ed. தம்பதியரின் புதல்வியான செல்வி. சுவிதாஇளங்கோவை 12-12-2005 ஆம் ஆண்டு மணமுடித்தார்.

திருமதி V.E. சுவிதாஜெயபிரகாஷ் B.Arch, M.Tech படித்து SHOBA DEVELOPERS PVT LTD -Banglore& Studio 3 Design-Vadadora பணிபுரிந்தார். இவர்களுக்கு J.S.சத்தியமித்திரன் என்ற ஒருமகனும் J.S.விஸ்ருதா என்ற ஒரு மகளும் உள்ளனர்.இருவரும் DELHI PRIVATE SCHOOL-Sharjahவில் படிக்கின்றனர். திரு.ஜெயப்பிரகாஷ் அவர்களின் மைத்துனர் E.செந்தில் B.E, MBA.TENCOR கம்பெனியில் பணிபுரிகிறார். தஞ்சாவூரில் RKR என்று அழைக்கப்படும் பிரபலதொழிலதிபர் R.K.Ramanathan அவர்கள் திருஜெயப்பிரகாஷ் அவர்களின் மைத்துனரின் மாமனார் என்பது குறிப்பிடதக்கது.

Spread the love