தனது வாழ்வை அடிமட்டத்திலிருந்து ஆரம்பித்து இன்று உயர்பதவியை அடைந்து இலட்சியப்பாதையில் செல்லும் திரு.செல்வன் என்னும் ஒரு பார்க்கவன் பற்றிய பதிவு இது…
திரு.செல்வன்அவர்கள் 10/10/1970 ஆம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை என்னும் கிராமத்தைச் சேர்ந்த திரு.கிருஷ்ணசுவாமி உடையார், பூவாம்மாள் அவர்களுக்கு மகனாகபிறந்தார்.
தனது ஆரம்பக்கல்வியை அன்னமங்கலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் பயின்றார். பின்னர் 1986-1989 ஆம் ஆண்டு திருச்சி சேஷசாயி தொழில்நுட்ப பயிலகத்தில் D.M.E பயின்றார்.
பின்பு 23/10/1998 ஆம் ஆண்டு வேப்பந்தட்டையை சேர்ந்த தனது மாமன் மகளான திருமதி.வசந்தியைமன முடிந்தார்.அவர் ஒரு M.A, B.Ed(தமிழ்) பட்டதாரி ஆவார். அவர் வேடந்தாங்கல் அரசுபள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.இவர்களது ஒரே செல்ல மகளான பாரதி, மதுரை மருத்துவக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்துவருகிறார்.தற்போது சென்னை குடுவாஞ்சேரியில் வசித்துவருகின்றனர்.
*1992-1995 ஆண்டுவரை GENERAL OPTICS ASIA- PONDICHERRY இல் பணிபுரிந்தார்.
*1995-2000 TELCO PUNE DIE ENGINEER ஆகபணிபுரிந்தார்.
*2000-2007 BEETICK TECHNICAL SERVICES-PUNE நிறுவனத்தை நிறுவினார். அதில் TATA MOTORS, BAJAJ,GODREJ, MAHINDRA,COMAU போன்ற நிறுவனங்களுக்கு TOOL AND DIE DESIGN SERVICES செய்தார்.
*பின்னர், தமிழ்நாட்டின் மேல் கொண்ட பேரன்பினால் அந்தநிறுவனத்தை CP VEHICLE SYSTEMS-UK என்னும் நிறுவனத்தோடு ஒப்படைத்துவிட்டு தமிழகம் திரும்பினார்.
*2008 ஆம்ஆண்டு Wipro technologies இல் பணிபுரிந்தார்.
*2008 முதல்இன்றுவரை Renault Nissan Technology Business center – Chennai இல் Production Engineering பிரிவில் Senior Manager ஆகபணிபுரிகிறார்.
Die designing இல் நல்ல அனுபவம் உள்ளவர். மேலும் பல நாடுகளுக்கு சென்று ON SITE Projects செய்துள்ளார்.
South Africa- Volkswagen
UK- Jaguar
China – Freightliner
France – Renault
Japan, Thailand – Nissan.
இத்தகைய அனுபவம்மிக்க, திறமையான பார்க்கவனை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெருமைக்கொள்கிறது பார்க்கவன்ஃபோரம்