Parkavan Forum

Support : +91 98844 29991

திரு.சிவகுமார்

அமீரகத்தில் மருந்தியல் துறையில் சிறந்து விளங்கும் திரு.சிவகுமார் அவர்களைப் பற்றியது,

இவர்  28/07/1974 அன்று பாண்டிச்சேரியில் திரு.தியாகராஜன் உடையார் திருமதி.விஜயலட்சுமி அம்மாள் அவர்களுக்கு மகனாக பிறந்தார். இவரது தந்தை திரு.தியாகராஜன் அவர்கள் திருச்சியில் சுகாதாரதுறை அதிகாரியாக பணிபுரிந்தார்.

இவருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். மூத்த சகோதரியின் கணவர்  PWD இல்முதன்மை பொறியியலாளராக பணிபுரிகிறார். இளைய சகோதரியின் கணவர் தஞ்சாவூர் பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதன்மை இயக்க அலுவலராக பணிபுரிகின்றார்.

தமிழகத்தில்  VSR  என்று அழைக்கப்படும் பிரபல வழக்கறிஞர் திரு.வி. எஸ். ராமலிங்கம் அவர்கள் திருசிவகுமார் அவர்களின் இளைய சகோதரியின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரு.சிவகுமார் அவர்கள் அமீரகத்தில் 20 வருடங்களாக பணியாற்றி வருகிறார். இவரது சொந்த ஊர் திருச்சிராப்பள்ளி. இவர் சென்னையில்  B.Pharm. படித்தார். மேலும் UNIVERSITY OF ATLANTA வில் MBA  படித்து முடித்தார். தற்போது GLAXCO PHARMA வில் HEAD OF LOGISTICS ஆகபணிபுரிகிறார்.

இவரது மனைவி பெயர் திருமதி சித்ரா சிவகுமார் இவர் திருச்சி  NATIONAL INSTITUTE OF TECHNOLOGY(NIT) இல் M.Tech படித்துமுடித்தார். இவர் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் இணைபேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவரது மகள் விஜயஸ்ரீஷார்ஜா டெல்லி பிரைவேட் ஸ்கூலில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றார். மகன் விஜய் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.

இவரது தாய் வழி தாத்தா பாண்டிச்சேரியைச் சேர்ந்த திருபாலா உடையார் நமது சமூகத்தில் மிகவும் பிரபலமானவர் பிரான்ஸ் பாதுகாப்பு சேவையில் பணியாற்றி போர் சேவையில் தங்கப்பதக்கம் பெற்றவர் என்பது மேலும் ஓர் நற்செய்தி. இவரது தந்தை வழி தாத்தா வானதுறையூரை சேர்ந்த திருசெல்வபெருமாள் துறையூரில்பிரபலமான சித்தமருத்துவர், ராமஜெயம் ட்ரான்ஸ்போர்ட்ஸ் உரிமையாளர்.

கடந்த இருபது வருடங்களாக தன்னால் இயன்றவரை நமது பார்க்கவகுல சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அமீரகத்தில் வேலைவாய்ப்பு பெற்றுதந்து உதவி செய்துள்ளார். இன்றும் நமது சமூகத்திற்காக தன்னால் இயன்றவரை உதவி செய்வேன் என்பதை பதிவு செய்கின்றார் திரு.சிவகுமார்அவர்கள்.  ரசாயனம் மற்றும் மருந்தியல் தொடர்பான வேலை வாய்ப்புகளுக்கு திரு.சிவகுமார் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.  திரு.சிவகுமார் அவர்கள் துபாய்ர ஜினிகாந்த் மன்றதலைவர் என்பது மேலும் குறிப்பிடத்தக்க ஒருசெய்தி.

இவர்  PARKAVAN FORUM GLOBAL GOVERNING BODY / CORE COMMITTEE உறுப்பினராகவும் இருக்கிறார்.  இவர் 40க்கும் மேற்பட்ட நமது சமுதாயமக்களுக்கு துபாயில் வேலை வாங்கி தந்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி இருக்ககிறார்.

இவரை நாம் அனைவரும் பாராட்ட கடமைப்பட்டு உள்ளோம்.

Spread the love