Parkavan Forum

Support : +91 98844 29991

திருமதி கி.கௌரி

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம் – 151
திருமதி கி.கௌரி
கல்லூரி பேராசிரியர்
தன்னம்பிக்கை பயிற்றுநர்

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற 
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

தன்னைக் காத்துக் கொண்டு, தன் கணவனையும் போற்றி காத்துக் கொண்டு, அவர்களின் குடும்ப புகழ் குறையாமல் இருக்கும் படி பார்த்துக் கொள்பவளே பெண்.
இவ்வாறாக இருந்து கொண்டு தான் கற்று அறிந்த துறையிலும் , தன் வாழ்க்கையிலும் வீரநடை போட்டு வெற்றி வாகை சூடி செல்லும் பார்க்கவ சிங்க பெண் திருமதி கி.கௌரி அவர்களை பற்றிய பதிவு.

திருமதி கி.கௌரி அவர்கள் கடலூர் மாவட்டம் , வேப்பூர் வட்டம், இலங்கியனுர் கிராமத்தில் *திரு. அ.கிருஷ்ணமூர்த்தி , திருமதி. கி. வசந்தா தம்பதியருக்கு 21.05.1989 அன்று மகளாகப் பிறந்தார்.

குடும்பம்:
*திருமதி கி.கௌரி* அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் எரவார் கிராமத்தில் *திரு.இளங்கோவன் ஆசிரியர் , திருமதி.முத்தம்மாள் அவர்களின் மகன் திரு.இ.கலைவாணன்* அவர்களை 06.07.2016 அன்று திருமணம் செய்தார். இவரது கணவர் மார்கெட்டிங் மேலாண்மை பணியில் Indian Express company யில் பணிபுரிந்து வருகிறார் . இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
மகன் பெயர் க.ஹர்ஷவர்தன்.
சென்னை மதுரவாயலில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

திருமதி கி.கௌரி அவர்கள் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் போது கல்வி விளையாட்டு என அனைத்து துறைகளிலும் மற்ற மாணவர்களுக்கு முன்னோடியாக இருந்தார்.

கல்வி:
கல்வியில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் பல்வேறு இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்..
திருமதி. கி.கௌரி, M.Sc(CS), M.Ed, M.Phil(Edn), M.Phil(CS), SLET..

விளையாட்டு:
பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் விளையாட்டு துறையில் மாநில அளவில் ஓட்டபந்தயம் மற்றும் நீளம் தாண்டுதலில் முதல் மற்றும் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.

தொழில்:
St.Peters institute of higher education and research பல்கலைக்கழகத்தில் கணிணி அறிவியல் துறையில் கடந்த மூன்று ஆண்டுகளாக பேராசிரியராகவும் கல்லூரி NSS Co-ordinator ஆகவும் பணியாற்றினார்.

தற்பொழுது குரு ஞானக் கல்லூரியில் கணிணி அறிவியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

கல்லூரி , பள்ளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிலரங்கம் நடத்துகிறார். NEET தேர்வு குறித்து ஆலோசனைகளையும் வழங்குகிறார். தனக்கு உண்டான கல்வியியல் அனுபவங்களை மற்றவர்களுக்கும், நம் சமூகத்திற்கும் பயன்படும் படி ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

இவரது வாழ்க்கை எதையும் சாதிக்க முழுமையான பங்களிப்பு , விடாமுயற்சி முக்கியம் என்பதை அனைவருக்கும் உணர்த்துகிறது‌.

திருமதி. கி.கௌரி அவர்களின் ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னால் இருந்து இவரை வழி நடத்தும் இவருக்கு பக்க பலமாக இருக்கும் இவரது கணவர் திரு.இ.கலைவாணன் அவர்களுக்கும் , இவரது குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். தனது குடும்பத்திற்கு , சமூகத்திற்கு அரணாக இருந்து பாரதி கண்ட புதுமை பெண்ணாக சாதித்து கொண்டு இருக்கும் திருமதி.கி.கௌரி அவர்களை அறிமுகப் படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு பெருமிதம் கொள்கிறது.

தொடர்புக்கு:
திருமதி. கி.கௌரி, M.Sc(CS), M.Ed, M.Phil(Edn), M.Phil(CS), SLET..
கல்லூரி பேராசிரியர்
தன்னம்பிக்கை பயிற்றுநர்
Cell: 9003450109 | 9092625156

Spread the love