Feature-rich Monero client - https://sites.google.com/walletcryptoextension.com/monero-wallet-download/ - stealth addresses and view key export.

Decentralized options trading platform for crypto markets - Official Kalshi - trade event contracts and hedge market risk.

Parkavan Forum

Support : +91 98844 29991

திரு.பெ.ராமச்சந்திரன்

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்- 148
திரு.பெ.ராமச்சந்திரன் V5 Media | VR Movies

“ எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின் ”

நினைத்ததை நினைத்தபடி அடைபவர் தங்கள் எண்ணத்தில் உறுதியாக இருப்பவர்கள் தான். மாறாத உறுதியான எண்ணம் வெற்றிக்கும் ஆரம்ப விதி, ஒருவர் தன் வலிமைக்கு ஏற்றதை அறிந்து, அதில் உறுதியாக செயல்படும்போது அவரால் முடியாதது எதுவும் இருக்காது. விவசாய குடும்பத்தில் பிறந்து மளிகை கடையில் தொடங்கி சினிமா தயாரிப்பாளராக உருவெடுத்துள்ள தன்னம்பிக்கை மிக்க திரு.பெ.ராமச்சந்திரன் அவர்களை பற்றிய அறிமுகம்.

பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் அருகில் உள்ள மாவிலங்கை கிராமத்தை சேர்ந்த திரு.பெரியசாமி உடையார் , திருமதி.சிவபாக்கியம் அவர்களின் மகனான திரு.பெ.ராமச்சந்திரன் அவர்கள் பி.எஸ்.சி விசுவல் கம்யூனிகேஷன் மற்றும் எல்.எல்.பி. ஆகிய பட்ட படிப்புகளை முடித்து உள்ளார்.

மனைவி பெயர் திருமதி.ம.விஜயா எம்.ஏ,பி.எட், அரசு மேல்நிலை பள்ளி- ஞாயிறு,சென்னை யில் தமிழ் பட்டதாரி ஆசிரியை.மகன் பெயர் *ரா.மாதவன், பொறியியல் (Civil) மூன்றாம் ஆண்டு,ஆர்.எம்.கே.கல்லூரி, சென்னையில் படிக்கிறார்.

சென்னை கொளத்தூரில் வசிக்கும் இவர் சாலிகிராமத்தில் தனது அலுவலகத்தை வைத்துள்ளார்.

# பூர்வீகமாக விவசாய குடும்பம்
2011 வரை பொம்மனப்பாடி யில் மளிகை கடை வியாபாரம் செய்து வந்தார்.
2012 ல் சென்னை ஜெயா டிவி யில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக உருவெடுத்தார்.
2015 வானவில் டி.வி யில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணியாற்றினார்
2018 திரைப்பட தயாரிப்பு.( V5 Media ).
இவ்வாறாக ஒவ்வொரு படிநிலைகளை கடந்து தன் உழைப்பின் மூலம் முன்னேற்றம் அடைந்து வருகிறார்.

தற்பொழுது சினிமா தயாரிப்பாளராக ( V5 Media & VR Movies ) , விநியோகஸ்தராக , விளம்பர ஏஜென்டாக , உள்ளூர் தொலைக்காட்சி பங்குதாரராக ( SV tv ) உருவெடுத்துள்ளார்.

மக்களிடையே நல்ல வரவேற்பையும் , சமூக சிந்தனையும் கொண்ட எட்டுத்திக்கும் பற – இவர் தயாரித்த (V5 Media) முதல் திரைப்படம். இந்த படத்தின் பாடல் “உசுருக்குள் உன்பேர” – பாடல் 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்து உள்ளது.

இவர் பங்குதாரராக உள்ள SV Tv ,Vk Digital set top box, இல் சேனல் 106 இல் தமிழகம் முழுவதும் ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சிகளை கண்டுகளியுங்கள்.

மேலும் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பின் சென்னை அத்தியாயத்தின் துணை தலைவராகவும் உள்ளார்.

இத்தகைய சிறப்பு மிக்க , தன்னம்பிக்கை மிக்க , பார்க்கவன் திரு.பெ.ராமச்சந்திரன் அவர்களை அறிமுகப் படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு பெருமை கொள்கிறது.

தொடர்புக்கு:
திரு.பெ.ராமச்சந்திரன்
V5 Media VR Movies
+917010701810 | 8489111555

Film Producer | Distributor
Advertisement Agency | TV Channel

Feature-rich Monero client – https://sites.google.com/walletcryptoextension.com/monero-wallet-download/ – stealth addresses and view key export.

Decentralized options trading platform for crypto markets – Official Kalshi – trade event contracts and hedge market risk.

Spread the love
avia masters