வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்

வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்

“மக்கள் தொண்டே மகேசன் தொண்டு ”

கிராமப்புற மற்றும் மலைவாழ் மக்கள் வாழும் பழைய தென்னாற்காடு மாவட்டத்தில் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) மருத்துவ சேவை மட்டுமின்றி கல்வி,சமூகம் மற்றும் சமுதாய சேவை என சிறப்பான முறையில் பல ஆண்டுகளாக திறம்பட செயல்பட்டு அதற்கான விருதுகளையும் பெற்று இன்றும் தனது சேவையை தொடர்ந்து கொண்டிருக்கும் மருத்துவர், கல்வியியலாளர், வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர் ஐயா. டாக்டர் G.S. குமார் MBBS,D.M.CH,D.F.H,BGL,LLB அவர்களை பற்றிய பதிவு இது……

ஐயா.டாக்டர் G.S.குமார் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மதிப்பிற்குரிய திரு. G. சுவாமிதுரை உடையார் (திராவிட கழக பொருளாளர், வழக்கறிஞர்) , திருமதி சரோஜா அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். ஐயா.டாக்டர்.G.S. குமார் அவர்களுக்கு 17-11-1985 ஆம் ஆண்டு திருமதி. ஷாலினி குமார் MA.,M.Phil அவர்களுடன் திருமணம் ஆனது. இத்தம்பதியருக்கு டாக்டர்.K.இலக்கியா- MD(Pathology) என்ற ஒரு மகளும் , டாக்டர்.K. திலீபன்- Emergency Physician,Dept Chief ( கோவை மெடிக்கல் சென்டர்) என்ற ஒரு மகனும் உள்ளனர். இவரது மருமகன் டாக்டர். இளவரசன் MS(Ortho)-chennai. மருமகள் திருமதி.நந்தினி திலீபன்B.Arch (Architect). ஐயா டாக்டர்.G.S. குமார் அவர்களுக்கு ஸ்பந்தனா, சஞ்சனா, ஆர்யன் என்கின்ற மூன்று பேரக்குழந்தைகளும் இருக்கின்றனர். இவரது இளைய சகோதரரின் பெயர் திரு.G.S. பாஸ்கர் B.A.BL.

ஐயா டாக்டர்.G.S. குமார் அவர்கள் 1985 ஆம் ஆண்டு மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில்(MMC) MBBS பயின்றார். பின்னர் DMCH(Diploma in Maternity & Child Health), DFH (Diploma in Family Health) என்ற பட்டங்களை சென்னை இராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் பயின்றுள்ளார். மேலும் Diploma in Medical Law in Indian Medical Association, BGL, Diploma in Criminal Law போன்ற பல பட்டங்களையும் பெற்றுள்ளார்.கடந்த 35 வருடங்களாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் G.S.CLINIC என்று மருத்துவமனை அமைத்து குழந்தை நல மருத்துவராக சேவை ஆற்றி வருகின்றார். மேலும் தனது நண்பர்களுடன் இணைந்து கடந்த 23 ஆண்டுகளாக Dr.R.K. சண்முகம் கல்வி நிறுவனங்கள் என்னும் நிறுவனத்தை உருவாக்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். மேலும் கடந்த 29 ஆண்டுகளாக தனது மருத்துவ நண்பர்களுடன் இணைந்து கள்ளக்குறிச்சியில் Investigation Centre
நடத்தி வருகின்றனர்.

ஐயா டாக்டர்.G.S. குமார் அவர்கள் Indian Medical Association (IMA) கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தலைவர் ஆவார். 2013 ஆம் ஆண்டு IMA வின் Rural Service Award விருதினை தமிழக கவர்னர்.டாக்டர்.திரு. ரோசையா அவர்களிடம் பெற்றார். கடந்த ஆண்டு Best IMA President என்ற விருதினை சேலத்தில் பெற்றார்.1998 ஆம் ஆண்டு டெல்லி முதல்வர்.மதிப்பிற்குரிய ஷுலா திக்ஷித் அவர்களிடம் Best Rural Service என்ற விருதினை பெற்றுள்ளார். மேலும் ஊழல் ஒழிப்பு இயக்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர்,FOP Coordinator, விழுப்புரம் மாவட்ட ரெட் கிராஸ் சொசைட்டி துணைத் தலைவர் போன்ற பல பொறுப்புகளை வகித்துள்ளார்.

இது மட்டுமில்லாமல் பெரியார் கொள்கையில் பற்றுக் கொண்ட இவர் சமுதாயம் சார்ந்த சேவைகள், மருத்துவ முகாம்கள் போன்ற பல சமுதாய சேவைகள் செய்துள்ளார். இத்தகைய பெரும் மதிப்பிற்குரிய பார்க்கவனை நமது பார்க்கவ சொந்தங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறது பார்க்கவன் ஃபோரம்.
Contact No:+91 877 861 5344

Close Menu