வாரம் ஒரு பார்க்கவன் அறிமுகம்-122

இளம் வயதிலேயே தமிழ் திரைப்பட உலகில் தனக்கென ஒரு    பெயரை உருவாக்கிய திரு. ஆரோக்கிய வினோத் சுரேஷ் அவர்களை பற்றிய பதிவு இது….

 

திரு.ஆரோக்கிய வினோத் சுரேஷ் அவர்கள் 15-07-1985  அன்று இராமநாதபுரம் மாவட்டம், பட்டினம்கட்டன் என்ற கிராமத்தில் திரு. இரோனிமஸ், திருமதி.சூசைமேரி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தையான திரு.இரோனிமஸ் ஒரு ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் ஆவார். திரு.சுரேஷ் அவர்களுக்கு ஒரு சகோதரி உண்டு. அவரது பெயர் திருமதி. ஜாஸ்ஃபின் மரியல் இரமேஷ்.தங்கையின் கணவரான திரு.இரமேஷ் அவர்கள் இந்திய இராணுவத்தில் பணிபுரிகிறார்.

 

திரு.சுரேஷ் அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் ,மண்டபம் என்ற ஊரில் தனது பள்ளிப்படிப்பை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்றார். இராமேஸ்வரம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் UG  பயின்றார். 2005-2008  ஆண்டு கோயம்புத்தூர் PSG  Arts& science College யில் MCA பயின்றார். 2008 ஆம் ஆண்டு Hexaware Technology என்ற நிறுவனத்தில் 8 மாதங்கள் பணியாற்றினார். பின்னர் Knack Information Technology என்ற நிறுவனத்தில் 6 மாதங்கள் பணியாற்றினார். 2011 ஆம் ஆண்டு சினிமாவில் கால் பதித்த திரு.சுரேஷ் அவர்கள் இதுவரை 60க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை (Commercial AD’s& Real Estate AD’s) இயக்கியுள்ளார். தமிழில் முதல் Anthology  திரைப்படமான 6 அத்தியாயம் என்ற திரைப்படத்தை  இயக்கியவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. . இன்று தமிழ் திரையுலகில் இருக்கும்  முதல் 3 பிரபல Promotion நிறுவனங்களில் இவரது  நிறுவனமான LIGHTS ON MEDIA வும் ஒன்று என்பது மேலும் ஒரு கூடுதல் சிறப்பு. மேலும் தமிழ் திரைப்பட உலகில் திரைப்பட ஆலோசகராகவும் திகழ்கின்றார். மேலும் தமிழகத்தில் வெளிவரும்  Low Budget  திரைப்படங்களை பெற்று அதை இலங்கை போன்ற நாடுகளுக்கு Film Distributor  ஆகவும் திகழ்கின்றார்.

 

திரு. சுரேஷ் அவர்கள் LIGHTS ON MEDIA என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆவார்.தனது இளம் வயதிலேயே தமிழ் திரைப்பட உலகில் தனது பெயரை பதித்த திரு.சுரேஷ் அவர்களை நமது பார்க்கவ சமுதாயத்திற்கு அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறது பார்க்கவன் ஃபோரம்.

Contact No: +9195515 56677

Email: lightsonenter@gmail.com

Close Menu