Parkavan Forum

Support : +91 98844 29991

திரு.Lr.A.செந்தில்குமார்

வாரம் ஒரு பாரக்கவன் அறிமுகம்- 147
வழக்கறிஞர் திரு.A.செந்தில்குமார்

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும்.

குறள் விளக்கம்:

நீதி முறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்கு தலைவன் என்றுக் கருதித் தனியே மதிக்கப்படுவான் என்ற வள்ளுவரின் வாக்கிற்கினங்க

மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு.A.செந்தில்குமார் அவர்களை பற்றிய அறிமுகம் இந்த வாரம்…

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம் முதுகுளம் கிராமம் திரு.ஆசைதம்பி உடையார் திருமதி A.தமிழ்மணி ஆகியோரின் இளைய மகனாக 15.06.1983 ல் திரு.செந்தில் குமார் பிறந்தார்.

தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச்சங்கம் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பையும் இளங்கலை கல்லூரிப் படிப்பை தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியிலும் தனது சட்ட கல்வியை சேலம் மத்திய சட்டக்கல்லூரியிலும் பயின்றார்.

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் T.மேட்டூர் திரு.T.பெரியசாமி உடையார்- திருமதி.இராஜகுமாரி ஆகியோரின் மகளான காயத்ரி B.E அவர்களை திருமணம் செய்தார் தனது செல்லக்குழந்தைகள் அமிழ்தா, வெண்பா ஆகியோருடன் மதுரையில் வசித்து வருகிறார்.

கடந்த 2007 ம் ஆண்டு முதல் தனது வழக்கறிஞர் தொழிலை சென்னை உயர்நீதிமன்றத்திலும் பின்பு மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும் கடந்த 12 ஆண்டுகளாக வழக்கறிஞராக சிறப்பாகவும் நல்ல வழக்குகளை தனது அனுபவம் மற்றும் தொழில் நுனுக்கத்தால் பல வழக்குகளில் வெற்றி பெற்றிருக்கிறார் தனது கிராமம் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்தாலும் தஞ்சாவூர் மிக அருகில் இருப்பதால் தனது வழக்கறிஞர் அலுவலகம் ஒன்று தஞ்சாவூரிலும் (சனி, ஞாயிறு மட்டும்) நடத்தி வருகிறார்.

தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட தெற்கு பகுதி மாவட்டங்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்குட்பட்ட மாவட்டங்கள் சார்ந்த வழக்குகள் மேற்கண்ட கிளையில் மட்டும் நடத்த முடியும் என்பதால் Writ Petition, Civil Appeal Cases, Criminal Side matters ஆகிய வழக்குகளில் சிறப்பு வாய்ந்தவராக திகழ்கிறார்

தனது சிறப்பான ஒத்துழைப்பின் மூலம் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பின் தஞ்சாவூர் மாவட்ட அத்தியாயத்தில் உறுப்பினராகவும் பொறுப்பாளராகவும் செயல்பட்டு
வருகிறார்.

* வழக்கறிஞர் திரு.A.செந்தில் குமார் * அவர்களை அறிமுகப்படுத்துவதில் பார்க்கவன் தொழிற்சார் கூட்டமைப்பு (PARKAVAN FORUM) பெருமை கொள்கிறது.

தொடர்புக்கு ,
*வழக்கறிஞர் திரு.A செந்தில் குமார்
51, காசிம் ரெசிடென்சி
யா.ஒத்தக்கடை,
மதுரை.
கைப்பேசி- 98430-13414

Spread the love